சிவில் பணிகள்
முல்லைத்தீவில் பாடசாலை பொருட்கள் மற்றும் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்
59 வது காலாட் படைப்பிரிவு, இலங்கை நிப்போன் கல்வி மற்றும் கலாச்சார நிலையத்துடன் இணைந்து, முல்லைத்தீவு மாவட்டத்தில், எளிய மாணவர்களின் கல்விப் பயணத்தை ஆதரிக்கும் வகையில் உதவித்தொகை மற்றும் அத்தியாவசிய பாடசாலைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது..
24 வது காலாட் படைப்பிரிவினால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.சி.எல். கலப்பத்தி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 24 வது காலாட் படைப்பிரிவு படையினர் உஹன பிரதேசத்தின் 35 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியை 2025 ஜனவரி 09 ஆம் திகதி ருஹுணுகமவில் நடாத்தினர்.
7 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் நன்கொடை நிகழ்வு
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 7 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 9 வது இலங்கை பீரங்கி படையணி அகியவற்றின் கட்டளை அதிகாரிகளின் தலைமையின் கீழ், 7 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் 04 ஜனவரி 2025 அன்று இரண்டு பயனுள்ள நன்கொடை திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
Donation of Sகெவில்-கட்டைக்காடு அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உதவி பொருட்கள் நன்கொடைchool Supplies to Students of GTM School, Kevil-Kaddeikadu
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 10 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியின் ஒருங்கிணைப்புடன், 04 ஜனவரி 2025 அன்று மருதங்கேனி கலாசார மையத்தில் பாடசாலை உதவி பொருட்கள் வழங்கும் நன்கொடை நிகழ்வு இடம்பெற்றது.
7 வது இலங்கை சமிக்ஞைப் படையணியினால் சிப்பாய்க்கு புதிய வீடு
7 வது இலங்கை சமிக்ஞைப் படையணி மற்றும் 5 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் படையினர், 2024 டிசம்பர் 28 அன்று குளியாப்பிட்டிய, கிரிந்தாவ்வில் சிரேஷ்ட அதிகாராவாணையற்ற அதிகாரிக்கான புதிய வீட்டை நிர்மாணித்தனர்.
23 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் மகுல்பொகுண-கலிங்கவில வீதி புனரமைப்பு
வெலிகந்த பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக மகுல்பொகுண குளம் நிரம்பி வழிந்ததை தொடர்ந்து மகுல்பொகுண மற்றும் கலிங்கவிலவை இணைக்கும் வீதி பாரியளவில் சேதமடைந்திருந்தது. இந்த அனர்த்தத்திற்கு பதிலளிக்கும் வகையில், 23 வது காலாட் படைப்பிரிவினர், 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினருடன் இணைந்து 2025 ஜனவரி 02 ம் திகதி விரைவான புனரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
541 வது காலாட் பிரிகேட் படையினரால் டெங்கு ஒழிப்பு திட்டம்
541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஐ.பீ. ஜயசிங்க ஆர்டபிள்யூபீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ். 541 வது காலாட் பிரிகேட் படையினர் 30 டிசம்பர் 2024 அன்று கள்ளியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை மேற்கொண்டனர்.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தில் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் பங்கேற்றனர்.