சுப்ரீம் கெயா ஜன சுவ யாத்ரா மருத்துவ முகாமிற்கு இராணுவ படையினர் உதவி

சுப்ரீம் கெயா ஜன சுவ யாத்ரா சமூக நலத் திட்டத்தின் கீழ் ஒரு கண் சிகிச்சை மற்றும் சுகாதார மருத்துவ முகாம் 2026 பெப்ரவரி 14 அன்று 61 வது காலாட் படைப்பிரிவின் கீழ் உள்ள ஸ்ரீ வர்தனாராமய விகாரையில் நடத்தப்பட்டது. இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி 55 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டதுடன் 150க்கும் மேற்பட்ட முதியோர் இதில் பங்குபற்றினர்.

முகாமின் போது, கண் பரிசோதனைகள் மற்றும் இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எதிர்காலத்தில் மூக்கு கண்ணாடி தேவைப்படுபவர்களுக்கு மூக்குகண்ணாடி வழங்க தேவையான ஏற்பாடுகளும் இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

11 வது கெமுனு ஹேவா படையணி படையினர் இந் நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவினர்.