சிவில் பணிகள்
இனோஷன் சுரன் இலங்கை இராணுவத்தால் கௌரவிப்பு
பிரான்சில் வசிக்கும் இலங்கையரான திரு. இனோஷன் சுரன், ஜெர்மனி, துருக்கி மற்றும் இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளை உள்ளடக்கிய பாரிஸிலிருந்து யாழ்ப்பாணம் வரை 10,000 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை நிறைவுசெய்தார். 2025 செப்டம்பர் 1 அன்று தனது பயணத்தைத் ஆரம்பித்த அவர் 2025 ஒக்டோபர் 23 அன்று யாழ்ப்பாணத்தை வெற்றிகரமாக வந்தடைந்தார்.
இராணுவத்தினரால் மாணவர்களுக்கு பாடசாலை உதவிபொருட்கள் வழங்கல்
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் இயங்கும் 24 வது காலாட் படைப்பிரிவின் 242 வது காலாட் பிரிகேடினால் ஏற்பாடு செய்யப்பட்ட அத்தியாவசிய பாடசாலை பொருட்கள் வழங்கல் திட்டம், 2025 ஒக்டோபர் 24 அன்று அம் / பானம மகா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இராணுவத்தினரால் வெடிபொருள் ஆபத்து தொடர்பான விழிப்புணர்வுத் திட்டம்
2025 ஒக்டோபர் 19ஆம் திகதி, 7வது பொறியியல் படையணியின் ஏற்பாட்டில் சேருநுவர 215 எப் நலன்புரி சமூக நிலையத்தின் கிராம மக்களுக்காக வெடிபொருள் ஆபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வு, சேருநுவர கிராம சேவையாளர் பிரிவின் கிராம சேவையாளரின் கோரிக்கையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்கு இராணுவத்தால் புதிய வீடு
23 வது காலாட் படைப்பிரிவின் 232 வது காலாட் பிரிகேடின் கட்டளையின் கீழ் இயங்கும் 4 வது கெமுனு ஹேவா படையணி படையினரால், கோமாதுரை வடக்கில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு கட்டப்பட்டது.
211 வது காலாட் பிரிகேடினால் மு/பரணகமவெவ பாடசாலைக்கு புதிய சமையலரை
211 காலாட் பிரிகேட், கஜபாபுர, மு/பரணகமவெவ பாடசாலைக்கு ஒரு புதிய சமையலரையை கட்டியது.
76 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு 51 வது காலாட் படைப்பிரிவினால் ஏழை குடும்பத்திற்கு வீடு
51 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டுதல் மற்றும் 513 வது காலாட் பிரிகேடின் மேற்பார்வையின் கீழ், 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் 76 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி காரைநகரில் ஒரு ஏழை குடும்பத்திற்கு கட்டிய புதிய வீட்டைக் கையளித்தனர்.
வன்னி பாதுகாப்பு படையினரால் சிறப்பு கண் மருத்துவ முகாம்
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் இலங்கை கண் தான சங்கத்துடன் இணைந்து 2025 ஒக்டோபர் 02 ஆம் திகதி ஒரு சிறப்பு கண் மருத்துவ முகாமை நடாத்தினர். பார்வைக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட 364 வறிய பொதுமக்களுக்கு முக்கிய மருத்துவ உதவிகளை வழங்கினர்.
யாழ்ப்பாணத்தில் எளிய பிள்ளைகளுக்கு இராணுவத்தினால் பாடசாலை பொருட்கள் விநியோகம்
இலங்கை இராணுவத்தினர், 2025 செப்டம்பர் 27 ஆம் திகதி கருகம்பனை சனசமூக நிலையத்தில் தேவையுள்ள குடும்பங்களைச் சேர்ந்த எண்பது பிள்ளைகளுக்கு பாடசாலை பொருட்களை விநியோகித்தனர்.
இரத்மலானை விழிப்புலனற்றோர் பாடசாலையின் பிள்ளைகளுக்கு இராணுவத்தினரால் உதவி
பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதல் மற்றும் இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ் இரத்மலானை விழிப்புலனற்றோர் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளின்படி, இலங்கை இராணுவம் விழிப்புலனற்றோர் பாடசாலை உறுப்பினர்களுக்கு 2025 செப்டம்பர் 26 முதல் 28 வரை யாழ்ப்பாணப் பகுதிக்கு சிறப்பு விஜயம் மேற்கொண்டபோது அவர்களுக்கு போக்குவரத்து, தங்குமிட வசதிகள் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கியது.
புனானியில் 2025 ஆம் ஆண்டு உலக தூய்மை தின நிகழ்வு
உலக தூய்மை தினம் 2025 நிகழ்ச்சி 2025 செப்டம்பர் 25 அன்று 23வது காலாட் படைப்பிரிவு மற்றும் புனானி சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.