23rd February 2026
55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எம்.ஜி.இ. ஹேரத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீசஎஸ்ச அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 551 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.பி.எம்.ஆர். கந்தேகும்புர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் கிளிநொச்சி பிரதேசத்தில் வசிக்கும் 22 கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கும் சமூக நலத்திட்டம் நடாத்தப்பட்டது.
7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜி.ஏ.எம்.என்.ஏ. சமரகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இத்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததுடன், இந்நிகழ்வில் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
இந்த திட்டம், இப்பகுதியில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து மற்றும் அத்தியாவசியத் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அத்துடன் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மருத்துவ முகாம் 2026 பெப்ரவரி 20 ஆம் திகதி 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி விரிவுரை மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
மருத்துவ பரிசோதனைகளை வைத்தியர் எஸ். கஜேந்திரா, கிளிநொச்சி சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலக ஊழியர்களுடன் இணைந்து நடாத்தியதுடன், பயனாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர்.