சிவில் பணிகள்
திருகோணமலையில் ஏழைக் குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு
22 வது காலாட் படைப்பிரிவின் மேற்பார்வையின் கீழ், திருகோணமலையில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு 2 வது தொ) கஜபா படையணியினால் ஒரு புதிய வீடு கட்டப்பட்டது.
51 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் நல்லூரில் பால் தேநீர் வழங்கல்
2025 ஆகஸ்ட் 20 முதல் 22 வரை நல்லூர் கந்தசாமி கோவில் வளாகத்தில், 51 வது காலாட் படைப்பிரிவின் படையினர் ப்யூர் டேல் சிலோன் லிமிடெட் மற்றும் ரிச்லைப் டெய்ரி லிமிடெட் ஆகியவற்றின் ஆதரவுடன், பக்தர்களிடையே 51,000 பால் தேநீர் கோப்பைகளை வழங்கினர்.
மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தினால் பாடசாலை உபகரண நன்கொடை வழங்கல்
மத்திய பாதுகாப்பு படை தலைமையக படையினர், வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பண்டாரவளை ஸ்ரீ மலியதேய வித்தியாலயத்தில் 2025 ஆகஸ்ட் 22 ஆம் திகதி பாடசாலை உபகரணம் வழங்கும் திட்டத்தை நடத்தினர்.
இராணுவத்தினால் இந்தி அறக்கட்டளையின் பிள்ளைகைளுக்கு போக்குவரத்து உதவி வழங்கல்
இந்தி அறக்கட்டளையின் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கமைய, இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை இராணுவம் 2025 ஆகஸ்ட் 23 அன்று ருவன்வெலி சேய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி வளாகத்தில் நடைபெற்ற மத ஆசீர்வாத நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்தி அறக்கட்டளையின் பிள்ளைகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கியது.
பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களும் கற்றல் உபகரணங்களும் வழங்குதல்
58 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் புத்தளம் மொரபத்தாவ பாடசாலை, காட்டுபுளியன் ஆரம்ப பாடசாலை மற்றும் மொரபத்தாவ பாடசாலைகளை சேர்ந்த 51 பிள்ளைகளுக்கு புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை விநியோகிக்கும் நன்கொடை நிகழ்வு 2025 ஆகஸ்ட் 07 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் ஏழை குடும்பத்திற்கு புதிய வீடு
51 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டுதலின் கீழ், 511 வது காலாட் பிரிகேட் மேற்பார்வையில் 2025 ஆகஸ்ட் 08 அன்று மயிலங்காடு ஏழாலை (தெற்கு) பிரதேசத்தில் வாழும் வறிய குடும்பத்திற்கான ஒரு புதிய வீட்டை 15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் நிர்மாணித்தனர்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு
சேருவில பகுதியில் தேவையுடைய ஏழைக் குடும்பத்திற்கு 09 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
12 வது கெமுனு ஹேவா படையணியினால் உலர் உணவு விநியோகத் திட்டம்
12 வது கெமுனு ஹேவா படையணி 2025 ஆகஸ்ட் 11 ஆம் திகதி தலுகானா கிராம சேவகர் பிரிவு அலுவலகத்தில் 80 எளிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் திட்டத்தை நடாத்தியது.
24 வது காலாட் படைப்பிரிவினால் பாடசாலை உதவிபொருட்கள் நன்கொடை
பிள்ளைகளின் கல்வியை ஆதரிக்கும் நோக்கில், 24வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் 2025 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாடசாலை உதவி பொருட்கள் நன்கொடை வழங்கல் நடைபெற்றது.
பலாங்கொடை காட்டுத்தீயை கட்டுப்படுத்த இராணுவத்தினர் இணைந்து நடவடிக்கை
2025 ஆகஸ்ட் 08 ஆம் திகதி பலாங்கொடை, இம்புல்பே, ஹால்பேயில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க, 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர், இலங்கை விமானப்படையுடன் இணைந்து விரைவாக செயல்பட்டனர்.