20th February 2026
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் உள்ள பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் 59 வது காலாட் படைப்பிரிவின் படையினர் முல்லைத்தீவு பகுதியில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசிய மகப்பேறு பொருட்களை 2026 பெப்ரவரி 14 அன்று வழங்கினர்.
இந்த தொண்டு முயற்சிக்கு நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் நிதியுதவி வழங்கியதுடன் அதன் பங்களிப்பில் தாய்மார்களுக்கு அத்தியாவசியப் பொருட் பொதிகளை வழங்கியது.
இதற்கு இணையாக முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து விழிப்புணர்வு சொற்பொழிவு நடத்தப்பட்டது. இந்த அமர்வில் தாய் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து, ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறைகள் மற்றும் கர்ப்ப காலத்தில் பராமரிப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இந்த விரிவுரை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்கியதுடன் ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் பாதுகாப்பான பிரசவத்தை உறுதி செய்வதற்கான அறிவை அவர்களுக்கு வழங்கியது.
இந் நிகழ்வில 591 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எச்.எம்.ஜே.டப்ளியூ பண்டார ஆரஎஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.