இராணுவ படையினரால் இரத்த தான நிகழ்வு

பொறியியல் சேவைகள் படையணியின் அதிகாரி கட்டளை படையின் (முல்லைத்தீவு) 2 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2026 பெப்ரவரி 10 அன்று முகாம் வளாகத்தில் இரத்த தான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்த சிறந்த திட்டத்திற்கு பொறியியல் சேவைகள் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தி 100 நன்கொடையாளர்கள் முன்னரங்க வழங்கல் பிரிவு மற்றும் 59 வது காலாட் படைப்பிரிவின் படையினருடன் இணைந்து இரத்த தானம் செய்தனர்.