பலாலி இராணுவ தள வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வு
30th September 2024
யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து பலாலி இராணுவ ஆதார வைத்தியசாலையினால் 2024 செப்டம்பர் 26 ஆம் திகதி இரத்த தானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைப்பெற்றது.
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 144 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியின் போது இரத்த தானம் செய்தனர்.