மதுரகட்டிய சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பாதுகாப்பிற்கு 18 வது கெமுனு ஹேவா படையணியினரால் கம்பி வேலி

19th September 2024

18 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2024 செப்டம்பர் 07 அன்று மதுரகட்டிய சிறுவர் அபிவிருத்தி நிலைய வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு கம்பி வேலியை அமைத்தனர். இந்த முயற்சியானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜிஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 18 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டிஎகே பலிஹேன அவர்களின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த திட்டம், பிள்ளைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது. கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டன.