விஷேட படையணி படையினரால் கொஹொலன்வலையில் புதிய பஸ் தரிப்பிடம்

10th October 2024

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை ஒட்டி, 09 ஒக்டோபர் 2024 அன்று ஏ9 வீதிக்கு அருகில் உள்ள கொஹொலன்வலை பகுதியில் பேருந்து தரிப்பிடத்தினை நிர்மாணிக்கும் பணியை விஷேட படையணி தலைமையக படையினர் வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

வன்னி பாதுகாப்பு படை தலைமைய தளபதியும் விஷேட படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பேரூந்து தரிப்பிடம் 10 ஒக்டோபர் 2024 அன்று அதிகாரப்பூர்வமாக பொதுமக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.