024 உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 20 வது கஜபா படையணியினால் சிறுவர்களுக்கு உதவி

6th October 2024

2024 ஆம் ஆண்டு உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில், கஜபா படையணியின் 20வது படையலகு, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்த தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தல்களுக்கமைய 2024 ஒக்டோபர் 1 ஆம் திகதி பரணமதவாச்சிய வித்தியாலயத்தில் 77 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் சமூக நலன்புரி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த முயற்சியை 221 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்.கே.ஏ.ஆர்.பீ ரத்நாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மேற்பார்வையிட்டார்.

இந்த நிகழ்வு 20வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூ.டபிள்யூ.என்.சீ வடுகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களால் கண்காணிக்கப்பட்டது.

கொழும்பில் வசிக்கும் நன்கொடையாளரான திருமதி பி. கொரத்தோட்ட மற்றும் பதவி ஸ்ரீபுர சனச வங்கி இந்த நிகழ்ச்சிக்கு தாராளமாக அனுசரணை வழங்கியது.

இத்திட்டத்தில் மரம் நடுதல், பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள் விநியோகம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மதிய உணவு வழங்குதல் என்பன அடங்கியிருந்தன. அனுசரனையார்கள், பெற்றோர்கள் மற்றும் 20 வது கஜபா படையணியின் 3 அதிகாரிகள் மற்றும் 40 சிப்பாய்கள் அடங்கிய குழுவினர் பொழுதுபோக்கு அமர்வுகளை ஏற்பாடு செய்தல், மதிய உணவு சமைத்தல் மற்றும் உணவு வழங்கல் ஆகியவற்றுக்கு உதவினர்.

அனைவரின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுடன் நிகழ்ச்சி சுமூகமாகவும் வெற்றிகரமாகவும் நடைப்பெற்றது.