56 வது காலாட் படைப்பிரிவு தளபதி 561 வது காலாட் பிரிகேடிற்கு விஜயம்

4th November 2024

56 வது காலாட் படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் எம்.பீ.என்.ஏ முத்துமாலை யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள், 561 வது காலாட் பிரிகேட், 16 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகியவற்றிற்கு 24 நவம்பர் 2024 அன்று விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த காலாட் படைப்பிரிவு தளபதி ஒவ்வொரு இடத்திலும் சிரேஷ்ட அதிகாரிகளால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், அவர் படையினருக்கு உரையாற்றினார். எதிர்கால நோக்கங்களுக்கான மூலோபாய வழிகாட்டுதலையும் அவர் வழங்கியதுடன், தொழில்முறை தரங்களைப் பேணுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார்.

விஜயத்தின் முடிவில், இந்நிகழ்வின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் கையெழுத்திட்டார். இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.