பட விவரணம்

Clear

இராணுவ விளையாட்டு நிகழ்வுகள் முடிவுற்றன

2017-10-06

இராணுவத்தின் 54ஆவது விளையாட்டுகளின் இறுதி நிகழ்வுகள் கடந்த வியாழக் கிழமை (05) முடிவிற்கு வந்தது. அந்த வகையில் மாலை வேளை ஹோமாகமவில் உள்ள தியகம அரங்கில் இடம் பெற்ற இந் நிகழ்வில் இராணுவ விளையாட்டு சங்கத்தின் பணிப்பாளரான சுதந்த பெரேரா அவர்களது அழைப்பை ஏற்று இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


இராணுவ தினத்தை முன்னிட்டு முஸ்லீம் சமய ஆசீர்வாத நிகழ்வு

2017-10-04

68 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு முஸ்லீம் சமய ஆசீர்வாத நிகழ்வுகள் கொள்ளுப்பிட்டி யும்மா பள்ளிவாசலில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது தலைமையில் இராணுவத்தினரது பங்களிப்புடன் (4) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றது.


இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு கிறிஸ்த்தவ மத ஆசீர்வாத நிகழ்வு

2017-10-04

இலங்கை இராணுவத்தின் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் கிறிஸ்தவ மத ஆசீர்வாத நிகழ்வுகள் மூன்றாம் திகதி செவ்வாய்க் கிழமை பொறளை சாந்த கிறிஸ்த்தவ பள்ளியில் இடம்பெற்றது.


ஜெய ஸ்ரீ மஹா போதியில் இராணுவ ஆசீர்வாத நிகழ்வுகள்

2017-10-02

இராணுவத்தின் 68 ஆவது வருட நிகழ்வு தினத்தையிட்டு அனுஷ்ட்டிக்கும் முகமாக அநுராதபுர ஜெய ஸ்ரீ மஹா போதியில் இராணுவ ஆசீர்வாத பௌத்த நிகழ்வுகள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவின் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.


68 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு கண்டியில் பௌத்த சமய நிகழ்வுகள்

2017-09-29

எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் இராணுவ தினத்தை முன்னிட்டு கண்டி தலதா மாளிகையில் இம் மாதம் (28) ஆம் திகதி இராணுவ ஆசிர்வாத பௌத்த நிகழ்கள் இடம்பெறும்.


யாழ்ப்பாண மக்களின் தேவை கருதி சுகாதாரப் பிரிவுகள் திறந்து வைப்பு

2017-09-25

யாழ்ப்பாண மக்களிற்கு சேவை செய்யும் நோக்கில் இராணுவத்தினரால் பலவாறான சுகாதார சேவைகளுக்கான வெளிநோயாளர்ப் பிரிவு மற்றும் பிராந்தி மருந்து அலுவலகம் போன்றன சுகாதா அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது.


இராணுவ தளபதி அமெரிக்க இராணுவ பதவிநிலை பிரதானி மற்றும் பசிபிக் கட்டளை தளபதிளை சந்திப்பு

2017-09-20

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் பசிபிக் இராணுவ தளபதிகளின் மாநாட்டிற்கு விஜயத்தை மேற்கொண்ட சமயத்தில் அமெரிக்க இராணுவ பதவி நிலை பிரதானியான ஜெனரல் மார்க் எ. மில்லி அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.


இராணுவ தளபதி தென்கொரியாவிற்கு விஜயம்

2017-09-19

உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கு செப்டம்பர் மாதம் 18 – 21ஆம் திகதி வரை சியோலியில் இடம்பெறவிருக்கும் இன்டோ ஆசிய பசுபிக்நாடுகளின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் தென்கொரியாவிற்கு 18ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.


பாதுகாப்பு தலைமையக நிர்மானிப்பு தொடர்பாக ஜனாதிபதி கண்காணிப்பு

2017-09-06

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அகுரேஹொடவில் புதிதாக நிர்மானித்து வரும் பாதுகாப்பு தலைமையகங்களை (5)ஆம் திகதி செவ்வாய்க கிழமை பார்வையிட்டார். அவருடன் ஜனாதிபதியின் செயலாளர்......


பல முக்கிய உரைகளுடன் நிறைவடைந்த கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு

2017-08-30

2017ஆம் ஆண்டு கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை (29) மாலை வேளை, இடம்பெற்றது. இவ்வாறு இடம் பெற்ற இருநாள் கருத்தரங்கானது வன்முறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இக் கருத்தரங்கில் 90ற்கும் மேற்பட்ட திறமையான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 800 முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.