இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு கிறிஸ்த்தவ மத ஆசீர்வாத நிகழ்வு
4th October 2017
இலங்கை இராணுவத்தின் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் கிறிஸ்தவ மத ஆசீர்வாத நிகழ்வுகள் மூன்றாம் திகதி செவ்வாய்க் கிழமை பொறளை சாந்த கிறிஸ்த்தவ பள்ளியில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயகா அவரது பாரியார் திருமதி சந்திரிகா சேனாநாயக ( இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி ) மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் ,அவர்களது குடும்பத்தாரும் கலந்து கொண்டனர்.
இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு கிறிஸ்த்தவ மத வழிபாடுகள் வணக்கத்துக்குரிய பிதா இமானுவேல் பெர்ணாந்து அவர்களால் விஷேட ஆசீர்வாத வழிபாட்டு பூஜைகள் இடம்பெற்றது.
இராணுவ கிறிஸ்த்தவ சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்தினால் பிரதம அதிதிகள் வரவேற்கப்பட்டனர். அதனை தொடர்ந்து இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் செயலாளர் பிரிகேடியர் மஞ்சுள பெர்ணாந்துவினால் வரவேற்பு உறை நிகழ்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து இராணுவ தளபதியின் தலைமையில் இராணுவ அனைத்து கொடிகளுக்கு ஆசீர்வாத வழிபாடு பூஜைகள் இடம்பெற்றது. இந்த வழிபாடுகளின் போது மெதடிஸ், எங்கலிக்கன், தேவாலயத்தின் பிதா அவர்களும் இந்த பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த கிறிஸ்தவ ஆசிர்வாத வழிபாட்டிற்கு முன்னாள் இராணுவ தளபதிகளான ஜெனரல் லயனல் பலகல்ல மற்றும் ஜெனரல் தயா ரத்னாயக அவர்கள் கலந்து கொண்டார்கள். இறுதியில் இராணுவ தளபதியினால் இந்த தேவாலயத்திற்கு நன்கொடை நிதி வழங்கப்பட்டது.
|