இராணுவ தினத்தை முன்னிட்டு முஸ்லீம் சமய ஆசீர்வாத நிகழ்வு

4th October 2017

68 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு முஸ்லீம் சமய ஆசீர்வாத நிகழ்வுகள் கொள்ளுப்பிட்டி யும்மா பள்ளிவாசலில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது தலைமையில் இராணுவத்தினரது பங்களிப்புடன் (4) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதியை அமைதி மற்றும் ஹார்மனி மையத்தின் அமைப்பாளர் மவுலவி ஆ\; - சேயிக் முனர் முலாபர் (நலீமி) மற்றும் இராணுவ முஸ்லீம் சங்கத்தின் தலைவரான பிரிகேடியர் பரிஷ் யூசுப் அவர்கள் வரவேற்றனர். பின்பு இராணுவ கொடிகளுக்கான ஆசீர்வாத வழிபாடல்களுடன் மும்மொழி வரவேற்பு உரை இடம் பெற்றது.

இந்த பூஜை வழிபாடுகள் இமாம் மவூலவி, அப்லால் ஹபிஷ் அஷ் ஷேக் மத குருமார்களின் பங்களிப்புடன் குராத் பிரார்த்தனைகள் இடம்பெற்றன். இறுதியில் இராணுவ தளபதியினால் இந்த மசூதியின் அபிவிருத்தியின் நிமித்தம் நிதி உதவி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் கலந்து சிறப்பித்தனர். 68 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு சம்பிரதாய சமய நிகழ்வுகள் தலதா மாளிகையிலும், ஜெய ஸ்ரீ மஹா போதியிலும், பொறளை சாந்த கிறிஸ்தவ தேவாலயத்திலும் இடம்பெற்றது.

|