பட விவரணம்
கட்டானையில் முதியோர் இல்லம்நிர்மாணிப்பு மற்றும் திறந்து வைப்பதற்கும் இராணுவ தளபதியின் வாழ்த்துக்கள்

இலங்கை இராணுவத்தில் ஓய்வு பெற்ற படைவீரர்களை கௌரவிக்கும் நிமித்தம் நாட்டின் பாதுகாப்பிற்காக அவர்கள் வழங்கிய அர்ப்பணிப்பு மற்றும் சேவைகளுக்கு மரியாதை மற்றும் அங்கீகாரம் அளித்தல் முகமாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களின் ஆலோசனைக்கமைய (Sri Lanka Ex-servicemen's Association)முன்னாள் இராணுவ சங்கத்தின்....
இதய அறுவை சிகிச்சை திட்டத்திற்கு இராணுவத்தினரின் ஒரு நாள் ஊதியத்தில்நிதி வழங்கள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையில் ‘Heart to Heart Trust Fund’ என்ற தொனிப்பொருளுக்கமைய இதய நோயாளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றும் நோக்குடன்உடனடி சிகிச்சைகளை மேற் கொள்வதற்காகஇராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் வேண்டுக்கோளுக்கமைய இராணுவத்தில் சேவை புரியும் அனைத்து படையினர்களின் ஒரு நாள் ஊதியத்தின் ஒரு பகுதியை ‘Heart to Heart Trust Fund’ நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
நவீன மயப்படுத்தப்பட்ட வசதிகளுடன் கணேமுல்லை கொமாண்டோ படைத் தலைமையகம் திறந்து வைப்பு

கணேமுல்லை பிரதேசத்தில் உள்ள கொமாண்டோ படைத் தலைமையகம் நவீன மயப்படுத்தப்பட்ட வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளதுடன் இக் கட்டடத் தொகுதியை திறந்து வைக்கும் நோக்கில் இப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இராணுவத் தளபதியவர்கள் பிரதம அதிதியாக கடந்த புதன் கிழமை (03) கலந்து கொண்டார்.
சட்டவிரோத போதைப் பொருள் பாவனைக்கெதிராக நாடுபூராக இடம்பெற்ற ‘பக்மஹதிவுரும’ உறுதிமொழி

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள்பாவனை, போதைப்பொருள் இறக்குமதி, மற்றும் போதைப்பொருள் விநியோகத்திற்கெதிரான ‘பக்ம திவுரும’ தேசிய உறுதிமொழி நிகழ்வுடன் நாடுபூராகவும் இன்று காலை (3) ஆம் திகதி இடம்பெற்றன.
போர் வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவிகள்

இராணுவ பட்டாலியன் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கமைய லயன்ஸ் கழகத்தின் மகளீர் பிரவின் உதவியுடன் போரினால் பாதிக்கப்பட்ட யுத்த வீரர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நோக்கத்துடன்இராணுவம் மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்பத்தினாருக்கு தையல் இயந்திரங்கள், ஆறு கணினிகள், வீட்டுத் தேவை உபகரணங்கள், இசைக் குழுவிற்கான புதிய ஆடைகள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஒரு செயற்கை கால்கள் இராணுவ தலைமையகத்தில் வைத்து இம் மாதம் (2) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
தியத்தலாவையில் இடம் பெற்ற ‘மித்ர சக்தி’ கூட்டுப்படை பயிற்சி

இலங்கை இந்திய இராணுவப் படையினருக்கிடையிலான கூட்டுப் படைப் பயிற்சியாக மித்திர சக்தி பயிற்சிகள் தியத்தலாவையில் இடம் பெற்றதோடு இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கடந்த சனிக் கிழமை(30) இப் பயிற்சிகளை பார்வையிடும் நோக்கில் கலந்து கொண்டதுடன் இந்திய இராணுவமானது பயங்கரவாதத்தை ஒழித்தமைக்கான பயிற்சி முறைகளும் இதன் போது காண்பிக்கப்பட்டது.
‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சி தியதலாவையில் இன்று ஆரம்பம்

இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம் ஒன்றினைந்து ‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சியானது இன்று (26) ஆம் திகதி தியதலாவையில் உள்ள கெமுனு காலாட் படையணி வளாகத்தினுள் ஆரம்பமாவதற்கு உள்ளது.
பனகொடையில் இடம் பெற்ற “திரிபிடஹபிவந்தனா’ நிகழ்வு

இராணுவ தலைமையகம் மற்றும் மேல் மாகண முகாம்களில் பணிபுரியும் 100 க்கும் அதிகமான அதிகாரிகள் படையினர்களின் பங்களிப்புடன் (22) ஆம் திகதி வெள்ளிக் கிழமை காலை பனகொடை இராணுவ ஸ்ரீ போதிராஜராமய விஹாரை வளாகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் வழிக்காட்டலின் கீழ் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் இராணுவ பௌத்த சங்கத்தினரின் ஏற்பாட்டில்“திபிடஹபிவந்தனா’ பௌத்த மத நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டன.
இராணுவ பொறியியலாளர் சேவைப் படையணியினரால் நிர்மானிக்கப்பட்ட சிறுநீரக பராமரிப்பு நிலையம்

இலங்கை இராணுவ 2 ஆவது பொறியியலாளர் சேவைப் படையணியின் 200 படையினரது பங்களிப்புடனும் கடற்படை மற்றும் விமானப் படையினரது பங்களிப்புடன் அநுராதபுரத்தில் நிர்மானிக்கப்பட்ட 4 மாடிக் கட்டிடமான ‘மெத்சிறி செவன’ சிறுநீரக பராமரிப்பு நிலையம் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இம் மாதம் (20) ஆம் திகதி பௌர்ணமி தினமன்று திறந்து வைக்கப்பட்டது.
இராணுவ கன்னிவெடிஅகற்றும் நடவடிக்கைதிட்டம்

இலங்கையின் தேசிய கன்னி வெடி அகற்றும் திட்டத்தில் 2016-2020 ஆண்டு வரையிலான பகுதியில் தேசிய அதிகாரசபை, பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில்சார் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளரால் உத்தியோகபூர்வமாகஇந்த நடவடிக்கைகளில் இணைக்கப்பட்டுள்ளது.