பனகொடையில் இடம் பெற்ற “திரிபிடஹபிவந்தனா’ நிகழ்வு

23rd March 2019

இராணுவ தலைமையகம் மற்றும் மேல் மாகண முகாம்களில் பணிபுரியும் 100 க்கும் அதிகமான அதிகாரிகள் படையினர்களின் பங்களிப்புடன் (22) ஆம் திகதி வெள்ளிக் கிழமை காலை பனகொடை இராணுவ ஸ்ரீ போதிராஜராமய விஹாரை வளாகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் வழிக்காட்டலின் கீழ் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் இராணுவ பௌத்த சங்கத்தினரின் ஏற்பாட்டில்“திபிடஹபிவந்தனா’ பௌத்த மத நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டன.

உலகலவிய ரீதியில் திபிடகய பௌத்த வரலாற்றின் முக்கியதுவத்தை மேம் படுத்தும் நோக்கில் இந் நிகழ்வானது மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்டது.

"பதினாறாம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் புத்தர் பிரசங்கம் செய்தார், திபிடக ஸ்ரீ சத்தர்ம எழுதப்பட்ட புத்தரின் பழங்கால போதனைகளைத் தொடர்ச்சியாக புராணத்தில் 2600 ஆண்டுகள் பிரகடனப்படுத்தப்பட்டதுடன் மிகவும் மரியாதைக்குரிய சிங்கள பெளத்த துறவிகள் கௌரவமாக பாதுகாக்கப்பட்டுள்ளதுடன் 6 தர்ம சொற்களஞ்சியங்களைப் பிரயோகித்து மகா சங்கத்தின் உறுப்பினர்களால் அர்ப்பணிப்பு, கௌரவம், ஒத்துழைப்பு மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் மூலம் உலக பாரம்பரியமாக எதிர்காலத்தை உலகில் காப்பாற்றுவோம் "என்று பௌத்த உறுதிமொழியில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பன்னிபிடிய, பிரக்மணகம கந்தே விஹாரையின் விகாராதிபதி பூஜ்ய பம்பரந்தே விஜேரானந்த சுவாமி அவர்களால் திபிடகயேயின் முக்கியத்துவம் தொடர்பான போதனை வழங்கப்பட்டது. அத்துடன் மானேல்வத்த நாகானந்த பௌத்த நிலையம் மற்றும் ஜயவர்தன புர பல்கலைகழகத்தின் விரிவுரையாளர் ஹசன்ன சமரசிங்க அவர்களினால் திபிடகயே வரலாற்று முக்கியத்துவம் தொடர்பான விரிவான விரிவுரையும் வழங்கப்பட்டன.

பனகொடையில் இடம் பெற்ற “திபிடஹபிவந்தனா விசேட நிகழ்விற்கு மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் 500 க்கும் அதிகமான படையினர்களும் கலந்து கொண்டன. |