பட விவரணம்
பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயாரென பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகள் தெரிவிப்பு

பாதுகாப்பு செயலாளரான (ஓய்வு) ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் முப்படைத் தளபதிகள் மக்களின் பாதுகாப்பு தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை முஸ்லிம் சங்கங்கள் இணைந்து ஒற்றுமைக்காக எழுந்திடுவோம், மதம் தாண்டிய மனிதம் எனும் தலைப்பில் சமாதான நிகழ்வு

இலங்கையின் பல முஸ்லீம் அமைப்புக்கள், முஸ்லீம் சிவில் சங்கத்தினர் இணைந்து ஒற்றுமைக்காக எழுந்திடுவோம் மதம் தாண்டிய மனிதம் எனும் தெனிப்பொருளின் கீழ் கொழும்பு 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் (04) ஆம் திகதி சனிக்கிழமை ஏற்பாடுசெய்யப்பட்டன. இந்த நிகழ்வில் பௌத்த, கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மத குருமார்கள், பாதுகாப்பு படைத் அதிகாரிகள் மற்றும் முன்னணி சிவில் சமுகத்தின் அங்கத்தவர்கள் அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டன.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் இராணுவ தளபதியை சந்திப்பு

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ரைட் ஹொன் பென் வாலஸ் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை (3) ஆம் திகதி இராணுவ தலைமையகத்திலுள்ள இராணுவ தளபதியின் பணிமனையில் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
கடந்த 24 மணித்தியாலயங்களுள் NTJ டிசேட்டுகள், வங்கி விண்ணப்ப படிவங்கள் மற்றும் மர்மமான இரத்த உறிஞ்சு கருவிகள் கண்டுபிடிப்பு

இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து நாடு முழுவதும் (2) ஆம் திகதி மாலை நடாத்திய நடாத்திய சோதனை நடவடிக்கைகளின் போது பயங்கரவாதிகளின் மறைவிடங்கள், வெடிமருந்து பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கிழக்கு மற்றும் மேற்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தினரால் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மீட்பு

நாடு முழுவதும் இராணுவத்தினர்கள் தங்கள் கவனத்தை மையமாகக் கொண்டு முஸ்லிம் ஆதிக்கம் நிறைந்த செறிவுகளில் கவனம் செலுத்தும் முகமாக கடந்த 12 மணித்தியாலங்களினுள் இராணுவம், பொலிஸார் கூட்டாக இணைந்து கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களான சேருநுவர, சம்மாந்துரை, ஏறாவூர், கல்முனை, கொடியாகும்புர....
பலமான பாதுகாப்பு இயல்புநிலையை ஏற்படுத்தும்: மட்டக்களப்பில் இடம்பெற்ற வருடாந்த விருந்தில்; தெரிவிப்பு

கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையக ஸ்தாபிப்பின் பின்னர் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியும் கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்களின் கட்டளையின் கீழ் மேல் மாகாணம் மற்றும் புத்தள மாவட்ட பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இராணுவம், கடற் படை, விமானப் படையினர் பொலிசாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஒன்றிணைந்த கூட்டு நடவடிக்கையானது கடந்த 24 மணித்தியாலத்துக்குள்; தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையகம் ஸ்தாபிப்பு

இராணுவ தலைமையகத்தினால் இம் மாதம் (29) ஆம் திகதி திங்கட் கிழமை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸாரை உள்ளடக்கி மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் வரையிலான பிரதேசங்களை உள்ளடக்கி இந்த கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையகம் ஸ்தாபிக்கப்பட்டது..
பயங்கரவாத அமைப்புமற்றும், பயங்கரவாதிகளின் வலையமைப்பு அடையாளம் - இராணுவ தளபதி தெரிவிப்பு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கொழும்பு மாவட்ட ஆயரான மெல்கம் ரஞ்ஜித் அவர்களை நேற்றைய தினம் (22) ஆம் திகதி கொழும்பில் உள்ள ஆயர் விடுதியில் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
பாக்கிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக குழு இராணுவ தளபதியை சந்திப்பு

பாக்கிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 17 மாணவர்கள் உள்ளடங்களான பிரதிநிதிக் குழுவினர் கடந்த 16 ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்திதனர்.
இந்தியா பாதுகாப்பு செயலாளர் மற்றும்இந்திய பிரதம பாதுகாப்பு பதவி நிலை பிரதானி விஜயம்

இலங்கையில்6 வது தடவையாக இடம்பெற்ற'இந்தியா-இலங்கை'வருடாந்த பாதுகாப்பு அமைச்சின் பேச்சுவார்த்தைகொழும்பில் கடந்த (8) ஆம் திகதி இடம்பெற்றது.அதற்குஅண்டைய நாடுகளுடன் சமாதான உறவுகளை மேம்படுத்துவதற்கான அதிக முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிராந்திய விடயங்களில் தற்போதைய நிலைமை....