சட்டவிரோத போதைப் பொருள் பாவனைக்கெதிராக நாடுபூராக இடம்பெற்ற ‘பக்மஹதிவுரும’ உறுதிமொழி

4th April 2019

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள்பாவனை, போதைப்பொருள் இறக்குமதி, மற்றும் போதைப்பொருள் விநியோகத்திற்கெதிரான ‘பக்ம திவுரும’ தேசிய உறுதிமொழி நிகழ்வுடன் நாடுபூராகவும் இன்று காலை (3) ஆம் திகதி இடம்பெற்றன.

மேலும் இம்மாதம் நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களில் இருந்து வருகைதந்த பாடசாலை மாணவர்கள், பொலிஸ் மற்றும் முப்படையைச் சேர்ந்த பிரதிநிதிகள் மூலம் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கான அர்பணிப்பு உறுதிமொழியானது சுதந்திர சதுக்கத்தில் வைத்து முன்மொழியப்பட்டன. பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நாட்டிலிருந்து முற்றாக போதைப் பொருள் பாவனையை இல்லாதொழிக்க உறுதிவழங்கிய அதேவேலை நாடுபூராக இடம்பெற்ற இந்த அரச நிகழ்வில், அரச நிறுவனங்களில் சேவை புரிபவர்கள் மற்றும் பாசாலை மாணவர்கள் தங்களது உறுதிமொழியினை வழங்கினார்கள்.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிலான இப்புதிய திட்டமானது இலங்கை சுங்கத் திணைக்களம், சட்ட வல்லுணர்கள் போதை பொருள் கட்டுப்பாட்டு சபை, வீஷேட பொலிஸ் படை, விமானப் படை கடற்படை, இராணுவம், பொலிஸ் மற்றும் ஜனாதிபதி பணிக் குழு ஆகியோரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றுவருகின்றது.

அதேபோல் கடந்த இரு வருடங்களில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல், போதை வஸ்துக்கு அடிமையாகுதல் மற்றும் விநியோகித்தல் போன்ற அச்சுறுத்தலுக்கு எதிராக, சிரமத்தின் மத்தியில் செயற்பட்ட பொலிஸ் குழு, வீஷேட பொலிஸ் படை, சேவையில் உள்ள படையினர் மற்றும் சிவில் செயற்பாட்டளர்கள் உள்ளிட்ட பலர் ‘ஜனாதிபதி பாராட்டுகள்’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் பிரிதொரு நிகழ்வொன்றில் வைத்து விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

புகைப்படம் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் |