கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையகம் ஸ்தாபிப்பு
30th April 2019
இராணுவ தலைமையகத்தினால் இம் மாதம் (29) ஆம் திகதி திங்கட் கிழமை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸாரை உள்ளடக்கி மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் வரையிலான பிரதேசங்களை உள்ளடக்கி இந்த ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளை தலைமையகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்கள் நியமிக்கப்பட்டதுடன் கடற்படைக்கு ரியர் அத்மிரால் டப்ள்யூ.ஏ.எஸ்.எஸ் பெரேரா அவர்களும், விமானப்படைக்கு எயார் வைஷ் மார்ஷல் டப்ள்யூ.எல்.ஆர்.பி ரொட்ரிகோ அவர்களும் பொலிஸாருக்கு பொலிஸ் அத்தியட்சகர் எல்.கே.டீ அனில் பிரியந்த அவர்களும் தலைமையதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
கொழும்பு இந்த நடவடிக்கை தலைமையகம் பாதுகாப்பு அமைச்சின் வழிக்காட்டலின் கீழ் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவ தலைமையகத்தினால் இந்த ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளை தலைமையகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (முடிவு) |