பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் இராணுவ தளபதியை சந்திப்பு

4th May 2019

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ரைட் ஹொன் பென் வாலஸ் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை (3) ஆம் திகதி இராணுவ தலைமையகத்திலுள்ள இராணுவ தளபதியின் பணிமனையில் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இச்சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பாகவும் நாட்டில் பாதுகாப்பு பணிகளில் ஒருங்கிணைந்த கட்டளையின் கீழ் பாதுகாப்பு படையினர்கள் ஈடுபட வேண்டும் என்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் சவால்களுக்கு எவ்வாறு முகமளிப்பது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. மேலும் உதிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலின் பின்பு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு வேண்டிய நேரத்தில் தங்களது நாட்டின் உதவிகளை வழங்க இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார்.

வன்முறைசெயல்கள் உலகளாவிய ரீதியில் இடம்பெறுவதாககவும் மனித உயிர்களைக் கோருகின்ற சட்டம் மற்றும் ஒழுங்குமுறைக்கு இடையூறுகள்தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார். அத்துடன்பல்வேறு மட்டங்களில் இளைஞர்களின் தீவிரமயமாக்கலுக்கும் கல்வி நோக்கங்களை அமுல்படுத்துவதற்கு இலங்கை அதிகாரிகளுக்கு உதவுமாறும் இராணுவ தளபதிபாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

இறுதியில் இராணுவ தளபதியின் பணிமனையிலிருக்கும் பிரமுகர்களின் வரு கையிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் அவரது வருகையை முன்னிட்டு கையொப்பமிட்டடார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன மற்றும் இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் ருவன் த சில்வா அவர்களும் இணைந்திருந்தார். |