ஐநா பணிகள்

ஐக்கிய நாடுகளின் பணிநிலை அதிகாரிகள் பாடநெறி எண் – 04 உலகளாவிய அமைதி காக்கும் நடவடிக்கையின் முன்முயற்சியின் ஆதரவில் 2025 ஆகஸ்ட் 11 முதல் 27 வரை இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.


புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு படை குழுவின் தளபதி லெப்டினன் கேணல் வைஎஸ்எச்என்பீ சில்வா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 26, அன்று நாகோரா முகாமில் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தளபதி மேஜர் ஜெனரல் டியோடாடோ அபக்னாராவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு, லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் பணியின் கீழ் அமைதி காக்கும் கடமைகளை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதன் பின்னர், 2025 ஜூலை 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் இராக்காவல், விபத்துக்குள்ளானவர்களை வெளியேற்றுதல் மற்றும் சுதந்திர நடமாற்றம் போன்ற நடவடிக்கைகளில் பயிற்சியில் ஈடுபட்டனர்.


16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு, லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் பணியின் கீழ் அமைதி காக்கும் கடமைகளை 2025 ஜூலை 04 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.


லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையில் உள்ள இலங்கைப் பாதுகாப்பு படை நிறுவனத்தின் 15 வது இலங்கைப் படை குழுவினர் சிறப்புமிக்க தங்கள் கடமைப் நிறைவுசெய்து 2025 ஜூலை 02 ம் திகதி நாடு திரும்பினர்.


லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் பணிக்காக இலங்கைப் பாதுகாப்பு நிறுவனத்தின் 16வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவினர் வாழ்த்துகள் மற்றும் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் 2025 ஜூலை 02, அன்று லெபனானுக்குப் புறப்பட்டனர்.


15வது இலங்கைப் பாதுகாப்பு படை குழு 2025 மே 28, அன்று நகோரா லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்தில் ‘சர்வதேச கலாசார விழா 2025’ வை நடாத்தியது.


லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை நிறுவனத்தின் ஆய்வுக் குழு, 15 வது இலங்கை பாதுகாப்பு படை நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு படையினருக்குச் சொந்தமான உபகரண ஆய்வை 2025 மே 23 ஆம் திகதி லெபனான் நகோரா “ஸ்ரீ பேஸ்” முகாம் வளாகத்தில் நடாத்தியது.


லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை பணியின் செயல்திறன், வள பயன்பாடு, கொள்கை செயல்திறன் மற்றும் நிர்வாக மற்றும் கட்டமைப்பு அம்சங்களை மையமாகக் கொண்ட 15 வது இலங்கைப் பாதுகாப்பு படை குழுவின் காலாண்டு மதிப்பீடு, லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் மதிப்பீட்டு பிரிவால் வெள்ளிக்கிழமை 2025 மே 09 அன்று ஸ்ரீ பேஸ் கேம்பில் ஆரம்பிக்கப்பட்டது.


தென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ வைத்திய படையின் நிலை 2 மருத்துவமனை 2025 மே 12 ஆம் திகதி வெசாக் போயா தினத்தைக் கொண்டாடியது.