30th August 2025
ஐக்கிய நாடுகளின் பணிநிலை அதிகாரிகள் பாடநெறி எண் – 04 உலகளாவிய அமைதி காக்கும் நடவடிக்கையின் முன்முயற்சியின் ஆதரவில் 2025 ஆகஸ்ட் 11 முதல் 27 வரை இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
பாடநெறியின் நிறைவு விழா 2025 ஆகஸ்ட் 27 ம் திகதி நடைபெற்றது. இந்த பாடநெறியில் இலங்கை இராணுவத்தின் 17 அதிகாரிகள், இலங்கை கடற்படையின் 3 அதிகாரிகள், இலங்கை விமானப்படையின் 3 அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா மற்றும் மங்கோலியாவை சேர்ந்த 3 வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட 26 வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முப்படை மாணவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் குழுவில் உலகளாவிய அமைதி காக்கும் நடவடிக்கை அமைப்பைச் சேர்ந்த பாட நிபுணர்கள் இருந்தனர். சிங்கப்பூரைச் சேர்ந்த திரு. அலெக்ஸ் லீ குழுத் தலைவராக இந்த பாடத்திட்டத்தை வழிநடாத்தினார். அதே நேரத்தில் நோர்வேயைச் சேர்ந்த திரு. ஸ்டீன் எலிங்சன் மற்றும் பிரேசிலைச் சேர்ந்த திரு. ஹார்லி ஆல்வ்ஸ் ஆகியோருடன் பாட நிபுணர்களாகப் பணியாற்றினர்.
இலங்கை இராணுவத்தின் பொதுபணி பணிப்பாளர் நாயகமும், இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் பதில் தளபதி, இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுடன் இணைந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.