29th November 2025
இலங்கை அமைதி காக்கும் படையினருக்கு நடமாடும் பயிற்சி குழுக்களை நடத்துவதற்காக இலங்கை விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, ஜெர்மன் ஆயுதப் படைகளைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் அடங்கிய உளவுப் பிரிவு 2025 நவம்பர் 26 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஜெர்மன் விமானப்படையின் கெப்டன் நில்ஸ் நோர்விக் தலைமையிலான உளவு குழு, வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தில் 2025 நவம்பர் 27 ஆம் திகதி அன்புடன் வரவேற்கப்பட்டது. வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எம்.கே.டி.பீ. மாபலகம பீஎஸ்சீ, இலங்கை சமாதான ஆதரவு செயற்பாடுகள் பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் வை.எம்.எஸ்.சி.பி. ஜயதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, இராணுவ பொறியியல் பாடசாலையின் தளபதி கேணல் ஜே.ஏ.சி.எஸ். ஜாகொட பீஎஸ்சீ மற்றும் வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் கேணல் கே.ஏ.பீ. கரவிட்ட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ உள்ளிட்ட இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடமாடும் பயிற்சி முதற்கட்ட கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
மேலும், இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், உளவுப் பிரிவு பல இராணுவப் பயிற்சி நிறுவனங்களை பார்வையிடும்.