ஐக்கிய நாடுகளின் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு பாடநெறி எண் 06 நிறைவு

ஐக்கிய நாடுகளின் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு பாடநெறி எண் 06, இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் 2025 செப்டம்பர் 08 முதல் 19 வரை நடத்தப்பட்டது.பாடநெறியின் நிறைவு விழா 2025 செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது.

இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவன தளபதி பிரிகேடியர் வை.எம்.எஸ்.சி.பி ஜயதிலக ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்தப் பாடநெறியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 20 அதிகாரிகள், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 02 அதிகாரிகள் மற்றும் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 02 அதிகாரிகள், பங்களாதேஷ், பீஜீ, இந்தோனேசியா,மெங்கோலியா, நேபாளம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 09 வெளிநாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் குழுவில் சர்வதேச அமைதி நடவடிக்கை அமைப்பு சேர்ந்த பாட நிபுணர்கள் இருந்தனர். கனடாவைச் சேர்ந்த திருமதி டிரேசி மார்டினோ குழுத் தலைவராக இந்தப் பாடத்திட்டத்தை வழிநடத்தியதுடன் அதே நேரத்தில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த திரு. விக்டர் மானுவல் நுனேஸ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த பிரிகேடியர் ஜெனரல் (ஓய்வு) நரேஷ் சுப்பா ஆகியோர் பிற பாட நிபுணர்களாகப் பணியாற்றினர்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் பயிற்றுனர்கள் பங்குபற்றினர்.