லெபனான் ஐ.நா இடைக்காலப் படையின் 16 வது இலங்கை பாதுகாப்பு படைக் குழுவை லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் சந்திப்பு

லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் திரு. கபில ஜயவீர அவர்கள் 2025 ஒக்டோபர் 03 ஆம் திகதி லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்தில், லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தளபதி மற்றும் பணி தளபதியை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, தூதுவர் லெபனானின் நாகோராவில் உள்ள 16 வது இலங்கைப் பாதுகாப்பு படை நிறுவனத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார். இவர் 2025 ஜூலை 04 ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் நிறுவனத்திற்கு மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும்.

இலங்கை தூதரகத்தின் தூதுவர் மற்றும் ஏனைய அதிகாரிகள், 16 வது இலங்கைப் பாதுகாப்பு படை குழுவின் கட்டளை அதிகாரி கஜபா படையணியின் லெப்டினன் கேணல் வை.எஸ்.எச்.என்.பீ. சில்வா யூஎஸ்பீ பீஎஸ்சீ, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர்.

இந்த விஜயத்தின் போது, ஐ.நா. கொடியின் கீழ் பணியாற்றும் அமைதி காக்கும் படையினராக அவர்களின் தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டி, அனைத்து வீரர்களுக்கும் உரையாற்றினார். தூதுவர் மற்றும் வருகை தந்த குழுவினருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.