லெபனானுக்கான இலங்கை தூதுவரை பாதுகாப்பு படை குழுவின் தளபதி மரியாதை நிமித்தம் சந்திப்பு

நகோராவில் உள்ள 16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவின் புதிய படைத் தளபதியான கஜபா படையணியின் லெப்டினன் கேணல் வை.எஸ்.எச்.என்.பீ சில்வா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் திரு. கபில ஜயவீர அவர்களை 2025 ஆகஸ்ட் 29 ஆம் திகதி பெய்ரூட் தூதரக அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

தூதுவர் படைத் தளபதியையும் அவரது குழுவினரையும் மரியாதையுடன் வரவேற்றார். பின்னர் லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு இலங்கை அமைதி காக்கும் படையின் பங்களிப்பு மற்றும் லெபனானில் இலங்கை படையினரின் நற்பெயரை மையமாகக் கொண்டு கலந்துரையாடப்பட்டது.

தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கான வாழ்த்துக்களுடன், படைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சார்பாக தூதுவரருக்கு நினைவுப் பரிசில் வழங்கியதுடன் இந்த விஜயம் நிறைவடைந்தது.