விளையாட்டு
பனாகொடையில் இராணுவ படையணிகளுக்கு இடையிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு
பனாகொடை இராணுவ உள்ள மைதானத்தில் 2025 நவம்பர் 03 முதல் 06 வரை நடைபெற்ற இராணுவ படையணிகளுக்கு இடையிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி 2025 நவம்பர் 06 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. 14 படையணிகளைச் சேர்ந்த 182 விளையாட்டு வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டனர்.
டபிள்யூ.எஸ். பொதேஜு நினைவு மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025 இல் இலங்கை இராணுவ மல்யுத்த வீரர்கள் பிரகாசிப்பு
சுரனிமல விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட டபிள்யூ.எஸ். பொதேஜு நினைவு மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025, ஜா-எலா உள்ளக அரங்கில் 2025 நவம்பர் 22 மற்றும் 23 அகிய திகதிகளில் நடைபெற்றது. இராணுவ மல்யுத்தக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஏ.எம்.சீ. அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய 34 ஆண் மற்றும் 13 பெண் விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
படையணிகளுக்கு இடையிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் - 2025 நிறைவு
20 வது படையணிகளுக்கு இடையிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2025 நவம்பர் 12 முதல் 14 வரை பனாகொடை இராணுவ உடற் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது.
இராணுவ படையணிகளுக்கு இடையிலான உள்ளக படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டி - 2025 நிறைவு
இராணுவ படையணிகளுக்கு இடையிலான உள்ளக படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டி – 2025 நவம்பர் 7 அன்று பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இராணுவ படையணிகளுக்கிடையிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025 நிறைவு
2025 ஆண்டுக்கான படையணிகளுக்கிடையிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி 2025 செப்டம்பர் 01, 02 மற்றும் 03 ஆகிய திகதிகளில் பனாகொடை இராணுவ உள்ளக அரங்கில் நடைபெற்றது. 10 படையணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 120 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டு தமது திறமை, ஒழுக்கம் மற்றும் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தினர்.
இலங்கை இராணுவ டேக்வாண்டோ குழுவினால் பயிற்றுனர்கள் மற்றும் கருப்பு பெல்டர்களுக்கு பட்டறை
இலங்கை இராணுவ டேக்வாண்டோ குழு 2025 ஆகஸ்ட் 20 முதல் 21 வரை பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாள் பட்டறையை நடாத்தியது.
இலங்கை இராணுவ பளுதூக்குதல் குழு நாடு திரும்பல்
2025 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் (சிரேஷ்ட/ கனிஷ்ட/ இளைஞர்) 2025 ஆகஸ்ட் 24 முதல் 28 வரை இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த முன்னணி பளுதூக்குபவர்கள் பங்கேற்றனர்.
இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான சைக்கிள் ஓட்ட சாம்பியன்ஷிப் - 2025
இராணுவ சைக்கிள் ஓட்டுனர் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான சைக்கிள் ஓட்ட சாம்பியன்ஷிப் - 2025, உடவலவேயில் 2025 ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் 118 ஆண் மற்றும் பெண் சைக்கிள் ஓட்டுனர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
4 வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் பதக்கம் வென்ற இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 4 வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் 12 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் வென்று நாட்டிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் மிகுந்த பெருமையை அளித்த இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்களின் சிறப்பான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பாராட்டினார்.
4 வது தெற்காசியா சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்-2025 இல் பங்குபற்றிய இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் நாடு திரும்பல்
2025 ஆண்டு நடைபெற்ற 4 வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் குழு 2025 ஒக்டோபர் 28 ஆம் திகதி நாடு திரும்பியது.