3rd September 2025
2025 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் (சிரேஷ்ட/ கனிஷ்ட/ இளைஞர்) 2025 ஆகஸ்ட் 24 முதல் 28 வரை இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த முன்னணி பளுதூக்குபவர்கள் பங்கேற்றனர்.
இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் தேசிய பளுதூக்குதல் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக நாட்டுக்கு திரும்பினர். அங்கு அவர்களை அணி முகாமையாளர், பயிற்சியாளர் மற்றும் சக உறுப்பினர்கள் அன்புடன் வரவேற்றனர்.
இராணுவத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில், 2 வது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் சாஜன் வைடிஐ குமார 60 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.