28th October 2025
2025 ஆண்டு நடைபெற்ற 4 வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் குழு 2025 ஒக்டோபர் 28 ஆம் திகதி நாடு திரும்பியது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவர்களை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து அன்புடன் வரவேற்றார்.
தெற்காசிய பிராந்தியத்தைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்களுடன் போட்டியிட்டு, இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் பல்வேறு தடகள மற்றும் களப் போட்டிகளில் ஈர்க்கக்கூடிய வகையில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் இலங்கை இராணுவத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் இராணுவ விளையாட்டு வீரர்கள் 12 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.