11th September 2025
2025 ஆண்டுக்கான படையணிகளுக்கிடையிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி 2025 செப்டம்பர் 01, 02 மற்றும் 03 ஆகிய திகதிகளில் பனாகொடை இராணுவ உள்ளக அரங்கில் நடைபெற்றது. 10 படையணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 120 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டு தமது திறமை, ஒழுக்கம் மற்றும் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தினர்.
நிறைவு விழாவில் பிரதம விருந்தினராக 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இலங்கை இராணுவ மல்யுத்தக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி. அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்கள் கலந்து கொண்டார்.
போட்டியின் நிறைவில், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி அணி 31 புள்ளிகளுடன் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றதுடன் இலங்கை சிங்க படையணி 23.5 புள்ளிகளுடன் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
பெண்கள் பிரிவில், 3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி 17 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப்பை வென்றதுடன் 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
போட்டியின் சிறந்த மல்யுத்த வீரராக இலங்கை பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்.பீ.டி.பீ சந்திரசேகரவும், சிறந்த தோல்வியாளருக்கான விருதை இலங்கை சிங்கப் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஜி.ஏ.ஜி.எம். பிரேமரத்னவும் பெற்றனர்.