பனாகொடையில் இராணுவ படையணிகளுக்கு இடையிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு

பனாகொடை இராணுவ உள்ள மைதானத்தில் 2025 நவம்பர் 03 முதல் 06 வரை நடைபெற்ற இராணுவ படையணிகளுக்கு இடையிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி 2025 நவம்பர் 06 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. 14 படையணிகளைச் சேர்ந்த 182 விளையாட்டு வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டனர்.

இலங்கை இராணுவ உபகரண பணிப்பாளர் நாயகமும் போர் கருவி படையணியின் படைத் தளபதியும் மற்றும் இலங்கை இராணுவ ஜூடோ கழகத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் டபிள்யூ. எம். எஸ். என். விஜேகோன் என்டிசீ ஏஏடிஓ அவர்கள் இறுதி நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

சாம்பியன்ஷிப் முடிவுகள் பின்வருமாறு:

ஆண்கள் சாம்பியன்ஷிப்:

• சாம்பியன்: இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி

• இரண்டாம் இடம்: கெமுனு ஹேவா படையணி

• மூன்றாம் இடம்: இலங்கை இராணுவ போர் கருவி படையணி

பெண்கள் சாம்பியன்ஷிப்:

• சாம்பியன்: இலங்கை இராணுவ மகளிர் படையணி

• இரண்டாம் இடம்: இலங்கை பொறியியல் படையணி

• மூன்றாம் இடம்: இலங்கை இராணுவ போர் கருவி படையணி

புதியவர் ஆண்கள் ஜூடோ போட்டி:

• சாம்பியன்: இலங்கை சிங்க படையணி

• இரண்டாம் இடம்: இலங்கை இராணுவ போர் கருவி படையணி / இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி

• மூன்றாம் இடம்: கெமுனு ஹேவா படையணி