இராணுவ படையணிகளுக்கு இடையிலான உள்ளக படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டி - 2025 நிறைவு

இராணுவ படையணிகளுக்கு இடையிலான உள்ளக படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டி – 2025 நவம்பர் 7 அன்று பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இராணுவப் படகோட்டக் குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்என்கேடி பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் நிறைவு விழாவில் கலந்துக்கொண்டு பங்கேற்பாளர்களின் உற்சாகம் மற்றும் விளையாட்டுத் திறனைப் பாராட்டினார்.

இலங்கை சமிக்ஞை படையணி தனது திறமையை வெளிபடுத்தி மொத்த சாம்பியன்ஷிப்பை பெற்ற, அதே வேளை இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி ஆண் பெண் இரண்டு பிரிவிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.