விளையாட்டு
2026 தேசிய உள்ளக படகோட்ட சாம்பியன்ஷிப்பில் இராணுவ படகோட்ட வீரர்கள் பிரகாசிப்பு
Tதேசிய உள்ளக படகோட்ட சாம்பியன்ஷிப் – 2026 போட்டி தியவன்னா ஓயா வளாகத்தில் ஜனவரி 30 முதல் 31 வரை தேசிய படகோட்ட சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இராணுவ குத்துச்சண்டை வீரர்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்-2025 இல் பிரகாசிப்பு
2025 ஆம் ஆண்டிற்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2026 ஜனவரி 26 முதல் 30 வரை ஹொரணை மாநகரசபை மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
தேசிய கயிறு இழுத்தல் சாம்பியன்ஷிப் 2026 இல் இலங்கை இராணுவம் வெற்றி
தேசிய கயிறு இழுத்தல் சாம்பியன்ஷிப் 2026 அனுராதபுர சல்காது மைதானத்தில் 2026 ஜனவரி 25 அன்று நடைபெற்றது. இந்த சாம்பியன்ஷிப்பை இலங்கை கயிறு இழுத்தல் சம்மேளனம் நடத்தியதுடன் இதில் 28 கயிறு இழுத்தல் விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் – 2025
தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் - 2025, கொழும்பு 07, டொரிங்டன் சதுக்கத்தில் உள்ள தேசிய பளுதூக்குதல் மையத்தில் 2026 ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.
படையணிகளுக்கிடையிலான பிலியட் மற்றும் ஸ்நூக்கர் - 2025 இற்கான சான்றிதழ் வழங்கும் விழா
இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான பிலியட் மற்றும் ஸ்நூக்கர் 2025 இன் கிண்ணம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா 2025 டிசம்பர் 30 ஆம் திகதி பொறியியல் சேவைகள் படையணி பிலியட் வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கை இராணுவ படையணிகளுக்கிடையிலான முப்போட்டி சாம்பியன்ஷிப் 2025
இலங்கை இராணுவ படையணிகளுக்கிடையிலான முப்போட்டி சாம்பியன்ஷிப் 2025 டிசம்பர் 20 அன்று எம்பிலிப்பிட்டிய சந்திரிகா குள வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இலங்கை இராணுவ விளையாட்டு உடற் பிடிப்பு பயிற்சி பாடநெறி எண். 10 நிறைவு
இலங்கை இராணுவ விளையாட்டு மருத்துவப் பிரிவு, விளையாட்டு உடற் பிடிப்பு பயிற்சி பாடநெறி. 10 (NVQ Level 04) இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையணி விரிவுரை மண்டபத்தில் 2025 டிசம்பர் 19 அன்று இடம்பெற்றது.
2025 ஆம் ஆண்டுக்கான படையணிகளுகிடையிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு
படையணிகளுக்கிடையிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி 2025 டிசம்பர் 10 முதல் 12 வரை பனாகொட இராணுவ உடற்கல்வி பாடசாலை உள்ளக மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டி 2025 டிசம்பர் 12, அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
ஈரானில் நடைபெற்ற 6 வது சர்வதேச ஆண்கள் பஜ்ர் கிண்ண பளுதூக்களில் சிறப்பான செயற்திறனுடன் இராணுவ வீரர்கள் நாடு திரும்பல்
6 வது சர்வதேச ஆண்கள் பஜ்ர் கிண்ண பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2025 நவம்பர் 26 முதல் 30 வரை ஈரான் தெஹ்ரானில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து சிறந்த விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இராணுவத்தின் உயரடுக்கு பளுதூக்குபவர்கள் குழு, தேசிய பளுதூக்குதல் அணியின் உறுப்பினர்களாகப் போட்டியிட்டு, சர்வதேச அரங்கில் குறிப்பிடத்தக்க திறமையை வெளிப்படுத்தினர்.
இலங்கை இராணுவ படையணிகளுக்கிடையிலான வுஷு போட்டி பனாகொடையில் நிறைவு
பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டு அரங்கில் நவம்பர் 25 முதல் 27 வரை இலங்கை இராணுவ படையணிகளுக்கிடையிலான வுஷு போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது. இராணுவத்தின் பல்வேறு படையணிகளைச் சேர்ந்த மொத்தம் 127 விளையாட்டு வீர மற்றும் வீராங்கனைகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.