20th November 2025
20 வது படையணிகளுக்கு இடையிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2025 நவம்பர் 12 முதல் 14 வரை பனாகொடை இராணுவ உடற் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது.
இலங்கை இராணுவ டேக்வாண்டோ குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்டிசீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
வெற்றியாளர்கள் பின்வருமாறு:
ஆண்கள் சாம்பியன்ஷிப் : இலங்கை சிங்க படையணி மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணி ஆகியன கூட்டு சாம்பியன்கள்
புதியவர்கள் சாம்பியன்ஷிப்: இலங்கை கவச வாகனப் படையணி
பெண்கள் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்: இலங்கை இராணுவ மகளிர் படையணி
டேக்வாண்டோ பூம்சே சாம்பியன்ஷிப்: விஜயபாகு காலாட் படையணி