30th October 2025
இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 4 வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் 12 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் வென்று நாட்டிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் மிகுந்த பெருமையை அளித்த இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்களின் சிறப்பான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பாராட்டினார்.
2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் ஒரு பாராட்டு விழா நடைபெற்றதுடன், இராணுவத் தளபதி விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளை நேரில் பாராட்டினார். இந்த நிகழ்வின் போது, எதிர்கால போட்டிகளில் அவர்களின் தொடர்ச்சியான வெற்றியை ஊக்குவிப்பதற்காக அவர் பண ஊக்கத்தொகைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, படையணி படைத்தளபதிகள், விளையாட்டு பணிப்பக பணிப்பாளர் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களின் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் விதமாக, 18 இராணுவ விளையாட்டு வீரர்கள் அவர்களின் அடுத்த நிலைக்கு நிலை உயர்வு வழங்கப்பட்டது.
பொம்படியர் கே.கே.டி.என். தர்மசேன - சம்மட்டி எறிதல் (வெண்கலப் பதக்கம்) பணிநிலை சார்ஜன் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார்.
பொம்படியர் எஸ்.ஏ.டீ. தசுன் - உயரம் பாய்தல் (தங்கப் பதக்கம்) சார்ஜன் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார்.
கோப்ரல் ஜி.ஆர். சத்துரங்க – 1500 மீ (வெள்ளிப் பதக்கம்) சார்ஜன் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார்.
கோப்ரல் டபிள்யூ.டி.எம்.எம்.எஸ். திசாநாயக்க – தட்டு எறிதல் (வெண்கலப் பதக்கம்) சார்ஜன் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார்.
லான்ஸ் கோப்ரல் டி.டீ.ஏ. டி சில்வா – 100 மீ (வெள்ளிப் பதக்கம்), 100 மீ x 4 (தங்கப் பதக்கம்) – 44.70 வினாடிகளில் ஓடி புதிய போட்டி சாதனை) கோப்ரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார்.
லான்ஸ் கோப்ரல் எம்.வை.எப். சபியா – 100 மீ (தங்கப் பதக்கம்) - "தெற்காசியாவின் வேகமான பெண்" என்ற சாதனை 11.53 வினாடிகள், 100 மீ x 4 (தங்கப் பதக்கம்) - புதிய போட்டி சாதனை 44.70 வினாடிகள், 200 மீ (தங்கப் பதக்கம்) - புதிய போட்டி சாதனை 23.58 வினாடிகள். கோப்ரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார்.
லான்ஸ் கோப்ரல் வீ. வக்சன் – 5000 மீ (வெள்ளிப் பதக்கம்) கோப்ரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார்.
லான்ஸ் கோப்ரல் டி.எம்.எச்.எஸ். கருணாரத்ன - 800 மீ (தங்கப் பதக்கம்) கோப்ரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார்.
லான்ஸ் கோப்ரல் வை.சி.எம். யோதசிங்க – 100 மீ (தங்கப் பதக்கம்) – "தெற்காசியாவின் வேகமான ஆண்" என்ற புதிய சாதனை 10.30 வினாடிகள், 100 மீ x 4 (தங்கப் பதக்கம்) கோப்ரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார்.
லான்ஸ் கோப்ரல் கே.ஏ.பீ. மல்ஷன் – முப்பாய்ச்சல் (தங்கப் பதக்கம்) கோப்ரல் கோப்ரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார்.
லான்ஸ் கோப்ரல் ஆர்.பீ. கமகே – உயரம் பாய்தல் (வெள்ளிப் பதக்கம்) கோப்ரல் கோப்ரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார்.
காலாட் சிப்பாய் டி.டி.எஸ்.தியலவத்த – 100 மீ x 4 (தங்கப் பதக்கம்) லான்ஸ் கோப்ரல் நிலை உயர்வு பெற்றார்.
சிப்பாய் என்.எம்.பீ.பீ. சில்வா – 100 மீ x 4 (தங்கப் பதக்கம்) லான்ஸ் கோப்ரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார்.
சிப்பாய் ஆர்.எம். நிப்ராஷ் – 1500 மீ (வெண்கலப் பதக்கம்) லான்ஸ் கோப்ரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார்.
சிப்பாய் டபிள்யூ.ஏ.எம்.ஆர். விஜேசூரிய – 10000 மீ (தங்கப் பதக்கம்) லான்ஸ் கோப்ரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார்.
சிப்பாய் எஸ்.கே. மிதுராஜ் – போடு குண்டு (வெண்கலப் பதக்கம்) லான்ஸ் கோப்ரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார்.
சிப்பாய் கே.கே.ஐ. சில்வா – 400 மீ x 4 (கலப்பு) (வெள்ளிப் பதக்கம்), 400 மீ x 4 (தங்கப் பதக்கம்), 400 மீ (வெண்கலப் பதக்கம்) லான்ஸ் கோப்ரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார்.
சிப்பாய் இ.எம்.எஸ். உபேக்ஷா - முப்பாய்ச்சல் (வெண்கலப் பதக்கம்) லான்ஸ் கோப்ரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார்.