டபிள்யூ.எஸ். பொதேஜு நினைவு மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025 இல் இலங்கை இராணுவ மல்யுத்த வீரர்கள் பிரகாசிப்பு

சுரனிமல விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட டபிள்யூ.எஸ். பொதேஜு நினைவு மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025, ஜா-எலா உள்ளக அரங்கில் 2025 நவம்பர் 22 மற்றும் 23 அகிய திகதிகளில் நடைபெற்றது. இராணுவ மல்யுத்தக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஏ.எம்.சீ. அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய 34 ஆண் மற்றும் 13 பெண் விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

சிறந்த திறமைகளையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தி, இராணுவ மல்யுத்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் சாம்பியன்ஷிப்பைப் பட்டத்தை பெற்றன. ஆண்கள் அணி 12 எடைப் பிரிவுகளில் 11 தங்கம், 9 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களையும், பெண்கள் அணி 10 எடைப் பிரிவுகளில் 6 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்றது.

ஆண்கள் பிரிவில் சிறந்த மல்யுத்த வீராங்கனையாக இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய் டி.டி.எஸ். தர்ஷன அவர்களும், பெண்கள் பிரிவில் சிறந்த தோல்வியடைந்த வீராங்கனையாக இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பெண் சிப்பாய் ஆர்.எம்.டபிள்யூ. காஞ்சனா அவர்களும் விருது பெற்றனர்.