3rd September 2025
இலங்கை இராணுவ டேக்வாண்டோ குழு 2025 ஆகஸ்ட் 20 முதல் 21 வரை பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாள் பட்டறையை நடாத்தியது.
இலங்கை இராணுவ சேவை படையணியின் மேஜர் ஆர்.பி.என். ரத்நாயக்க, தேசிய விளையாட்டு விஞ்சான நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் திரு. ஜீ.எல். சஜித் ஜயலால் மற்றும் திரு. ரசிந்து ஜயசிங் ஆகியோருடன் இணைந்து விரிவுரைகள் மற்றும் நடைமுறை பட்டறையை நடத்தினர்.
பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 60 டேக்வாண்டோ பயிற்றுனர்கள் மற்றும் கருப்பு பெல்ட் வைத்திருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
குழு தலைவர் மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்டிசீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.ஏ.டி.சி.ஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.