20th March 2026
விசேட படையணியின் அடிப்படைப் பாடநெறி எண் – 57 இன் விடுகை நிகழ்வானது 2026 மார்ச் 20 அன்று மாதுரு ஓயா விசேட படையணி பயிற்சி பாடசாலையில் நிறைவு பெற்றது. இப் பாடநெறியில் 5 அதிகாரிகள் மற்றும் 59 சிப்பாய்கள் தீவிர ஒன்பது மாத அடிப்படைப் பயிற்சியினை பெற்றனர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்துகொண்டார்.
விஷேட படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூ.பி.எம்.கே.ஜீ.கே. வீரசேகர டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஏயூஎஸ்டப்ளியூசீ பீஎஸ்சீ அவர்கள் விசேட படையணி பயிற்சி பாடசாலை தளபதி கேணல் டி.எம்.சி.குணசேகர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுடன் இணைந்து பிரதம விருந்தினரை வரவேற்று, அணிவகுப்பை ஆய்வு செய்ய அவரை அழைத்தார்.
மேஜர் என்.பீ.என்.எம். நாணயக்கார யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் வண்ணமயமான பயிற்சி நிறைவு அணிவகுப்பிற்குத் தலைமை தாங்கியதுடன் மேஜர் எஸ்.ஜே. விஜேமன்ன யூஎஸ்பீ அவர்கள் இரண்டாம் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்.
பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி, இரண்டாம் லெப்டினன் ஆர்.ஜி.டி.ஜி. ராஜபக்ஷ உடல் தகுதியில் சிறந்தவராகவும், இரண்டாம் லெப்டினன் எல்.ஜி.கே.எம். டி சில்வா தந்திரோபாயத்தில் சிறந்தவராகவும் அங்கீகரிக்கப்பட்டனர். சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரர் என்ற பட்டம் லான்ஸ் கோப்ரல் எஸ்.எஸ்.எம். குமாரவுக்கு வழங்கப்பட்டதுடன் விஷேட படையணி 57வது அடிப்படைப் பயிற்சி பாடநெறியின் சிறந்த மாணவராக இரண்டாம் லெப்டினன் எல்.ஜி.கே.எம். டி சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, முதன்மை பதவி நிலை அதிகாரிகள், பாதுகாப்புத் தூதர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயிற்சியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.