செய்தி சிறப்பம்சங்கள்
“விரு சிசு பிரதீப” கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் இராணுவத் தளபதி கலந்து சிறப்பிப்பு
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய போர்வீரர்களின் பிள்ளைகளை அங்கீகரிக்கும் வகையில், போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், 2026 ஏப்ரல் 29 அன்று இராணுவத் தலைமையகத்தில் “விரு சிசு பிரதீப” புலமைப்பரிசில் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்தது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் இராணுவத் தளபதியை சந்திப்பு
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கொமடோர் ஜனக குணசீல அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஏப்ரல் 23 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
மியான்மரில் வெற்றிகரமான பணிக்குப் பின் இலங்கை முப்படை மனிதாபிமான நிவாரணக் குழு நாடு திரும்பியது
சமீபத்திய பேரழிவு நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அவசர நடவடிக்கைகளுக்காக மியான்மருக்கு அனுப்பப்பட்ட முப்படை மனிதாபிமான நிவாரணக் குழு, தனது பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர் இன்று (ஏப்ரல் 26, 2025) இலங்கைக்கு நாடு திரும்பியது.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இராணுவத் தளபதியைச் சந்திப்பு
இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) நய்யார் நசீர், எச்ஐ (எம்) அவர்கள் 29 ஏப்ரல் 2026 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
மிஹிந்து செத்மெதுர நலவிடுதி புத்தாண்டு விழாவில் இராணுவத் தளபதி கலந்து சிறபிப்பு
அத்திட்டிய மிஹிந்து செத் மெதுர நலவிடுதியின் போர்வீரர்கள், 28 ஏப்ரல் 2026 அன்று தங்களது புத்தாண்டு விழாவை கோலாகலமாகவும், விழாக்கோலத்துடன் கொண்டாடினர்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
மேஜர் ஜெனரல் கே.டி.யூ கருணாரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள், 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 ஏப்ரல் 27 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
சர்வதேச பயிற்சிக்குரிய துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் ரைபிள் நிலை III - 2025 சாம்பியன்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
சர்வதேச பயிற்சிக்குரிய துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் ரைபிள் தேசிய நிலை III-2025 போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்களான இராணுவ துப்பாக்கிச் சூடு வீரர்களின் சிறந்த செயல்திறனை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஏப்ரல் 23 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்புப் பாராட்டு விழாவில் பாராட்டினார்.
பாகிஸ்தானில் நடைபெறும் 'ஷேக் ஹேண்ட் – II' கள பயிற்சிக்காக இலங்கை இராணுவ குழுவினர் புறப்படல்
'ஷேக் ஹேண்ட்' பயிற்சியின் இரண்டாம் பதிப்பு, பாகிஸ்தான் தர்பேலாவில் உள்ள விசேட நடவடிக்கைகள் பாடசாலையில் 2026 ஏப்ரல் 26 முதல் 10 மே 2026 வரை நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதும், அறிவுப் பகிர்வை ஊக்குவிப்பதும் இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளின் இராணுவ வான் பாதுகாப்பு கல்வியற் கல்லூரி பிரதிநிதிகள் குழு இராணுவத் தளபதியைச் சந்திப்பு
லெப்டினன் ஜெனரல் கிளெப் வி. எரெமின் தலைமையிலான, ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளின் இராணுவ வான் பாதுகாப்பு கல்வியற் கல்லூரி பிரதிநிதிகள் குழு ஒன்று 2026 ஏப்ரல் 23 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தது.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
மேஜர் ஜெனரல் பீ.ஆர் பத்திரவித்தான யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள், 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 ஏப்ரல் 23 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.