2026-03-24
இராணுவத் தளபதியினால் பணியில் இருக்கும் படைவீரருக்கு புதிய இல்லம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் மட்டக்களப்பு, செட்டிபாளையத்தில் 21 மார்ச் 2026 அன்று, புதிதாகக் கட்டப்பட்ட ஒரு வீட்டைப் பணியில் உள்ள இராணுவ வீரர் ஒருவருக்கு வழங்கினார்.
இத் திட்டத்திற்கு 11 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினர் உதவி வழங்கினர்.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.