செய்தி சிறப்பம்சங்கள்
இலங்கை பீரங்கி படையணியின் 138வது ஆண்டு நிறைவில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு இராணுவத் தளபதி அஞ்சலி
இலங்கை பீரங்கிப் படையணி தனது 138வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2026 ஏப்ரல் 20 அன்று படையணி தலைமையகத்தில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.
துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில் இராணுவத் தளபதி பங்கேட்பு
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையத்தின் வழிகாட்டுதல் மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் 2026 ஏப்ரல் 18 ஆம் திகதி துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்துகொண்டார்.
ஜெர்மன் விமானப்படைத் தூதுக்குழு இராணுவத் தளபதியை சந்திப்பு
ஜெர்மன் விமானப்படையின் லெப்டினன் கேணல் பிராங்க் விர்த்ஸ் மற்றும் கெப்டன் நில்ஸ் நார்விக் ஆகியோர், 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.
இராணுவ தலைமையகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
சம்பிரதாய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம், 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில், சம்பிரதாய சிற்றுண்டிகள் மற்றும் சுமூகமான ஒன்றுகூடலுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
நிலை உயர்வு பெற்ற புதிய மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவத் தளபதியின் வாழ்த்து
அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் டபிள்யூ.எஸ். கமகே ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.பீ.டபிள்யூ.என்.டி.பி. வீரக்கோன் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஆகியோர் 2026 ஏப்ரல் 15 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய சந்திப்பின்போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகாரச் சின்னங்களையும் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டனர்.
ஓய்வுபெற்ற வீரர்களுக்கான இராணுவ மின்-வலைதள அங்குரார்ப்பண நிகழ்வில் இராணுவத் தளபதி பங்குபற்றல்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான சேவைகளை உள்ளடக்கும் வகையில் விரிவாக்கப்பட்ட இராணுவ மின்-வலைதளத்தை (E-Portal) இராணுவத் தலைமையகத்தில் 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இராணுவத் தளபதியின் பங்கேட்புடன் 'தித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கான வவுச்சர் வழங்கும் நிகழ்ச்சி
‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற வவுச்சர் வழங்கும் நிகழ்ச்சியில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்துகொண்டார். இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.எம்.சி. ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திட்டம் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இராணுவத் தளபதி புத்தாண்டு வாழ்த்துகளுடன் அனுராதபுரம் அபிமன்சல-1 நலவிடுதிக்கு விஜயம்
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, 2026 ஏப்ரல் 08 அன்று அனுராதபுரம் அபிமன்சல-1 நலவிடுதிக்கு விஜயம் மேற்கொண்டார். வருகை தந்த, இராணுவத் தளபதியின் வாகன தொடரணிக்கு நுழைவாயிலில் மரியாதை வழங்கப்பட்டது. இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி அந்த வளாகத்தைச் சுற்றிப் பார்வையிட்டதுடன் அங்கு தங்கியிருந்தவர்களின் நலம் குறித்துக் கேட்டறிந்தார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
மேஜர் ஜெனரல் கே.பீ.பீ. கருணநாயக்க அவர்கள், 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 ஏப்ரல் 07 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இராணுவத் தளபதியினால் புதிய வீடு திறப்பும் இலங்கை இராணுவ போர்கருவி படையணி தலைமையகத்திற்கு விஜயமும்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 ஏப்ரல் 06 அன்று பட்டகொடெவில் இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு புதிதாகக் கட்டப்பட்ட இல்லத்தைத் திறந்து வைத்தார்.