21st April 2026
இலங்கை பீரங்கிப் படையணி தனது 138வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2026 ஏப்ரல் 20 அன்று படையணி தலைமையகத்தில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.
இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியும், இலங்கை பீரங்கிப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் அழைப்பின் பேரில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.
இராணுவ சம்பிரதயத்திற்கிணங்க, வருகை தந்த இராணுவத் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து, தேசிய கீதம், இராணுவப் பாடல் மற்றும் படையணியின் பாடலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவாக பல மத அனுஷ்டனங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் போர் வீரர்களின் உன்னத தியாகத்தை கௌரவிக்கும் வகையில், கூடியிருந்த அனைவரும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இராணுவத் தளபதி, பீரங்கிப் படையணியின் படைத் தளபதி,சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து, நினைவு தூபியில் மலர் வைத்து வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்வின் நிறைவாக 'லாஸ்ட் போஸ்ட்' வாசிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.