இராணுவத் தளபதியினால் புதிய வீடு திறப்பும் இலங்கை இராணுவ போர்கருவி படையணி தலைமையகத்திற்கு விஜயமும்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 ஏப்ரல் 06 அன்று பட்டகொடெவில் இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு புதிதாகக் கட்டப்பட்ட இல்லத்தைத் திறந்து வைத்தார்.

வருகை தந்த இராணுவ தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களை இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.என். விஜேகோன் என்டிசீ ஏஏடிஓ மற்றும் இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிர்மலி விஜேகோன் ஆகியோர் இணைந்து வரவேற்றனர்.

சுப நேரத்தில், இராணுவத் தளபதி புதிதாகக் கட்டப்பட்ட வீட்டின் சாவியினை இலங்கை இராணுவ போர் கருவி படையணி சார்ஜன் டபிள்யூ.பி. தர்மப்பிரியவிடம் முறைப்படி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி இலங்கை இராணுவ போர் கருவி படையணி தலைமையகத்திற்குச் விஜயம் மேற்கொண்டார். வருகை தந்த இராணுவ தளபதியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டது. இந்த வருகையின் போது, அவர் ஒரு மரக்கன்றை நாட்டியதுடன் குழு படம் எடுத்துக்கொண்டதுடன் மற்றும் முகாமைப் பார்வையிட்டார்.

போர் கருவி படையணி பயிற்சிப் பாடசாலையில் இராணுவத் தளபதி ஆற்றிய படைவீரர்களுக்கான உரையுடன் இந்த வருகை நிறைவடைந்தது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.