8th April 2026
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, 2026 ஏப்ரல் 08 அன்று அனுராதபுரம் அபிமன்சல-1 நலவிடுதிக்கு விஜயம் மேற்கொண்டார். வருகை தந்த, இராணுவத் தளபதியின் வாகன தொடரணிக்கு நுழைவாயிலில் மரியாதை வழங்கப்பட்டது. இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி அந்த வளாகத்தைச் சுற்றிப் பார்வையிட்டதுடன் அங்கு தங்கியிருந்தவர்களின் நலம் குறித்துக் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில், இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ். ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ, முன்னாள் போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.ஜி.எல்.கே. வீரகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, அபிமன்சல – 1-இன் தளபதி பிரிகேடியர் யூ.ஆர்.ஐ.பி. ரணதுங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள்,சிப்பாய்கள் மற்றும் போர்வீரர்கள் கலந்து கொண்டனர்.