11th April 2026
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான சேவைகளை உள்ளடக்கும் வகையில் விரிவாக்கப்பட்ட இராணுவ மின்-வலைதளத்தை (E-Portal) இராணுவத் தலைமையகத்தில் 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
வருகை தந்த இராணுவத் தளபதியை, இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.ஜி. பண்டாரநாயக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எம்.ஆர். ஹமீம் யூஎஸ்பீ ஆகியோர் வரவேற்றனர்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்களுக்கான தொகுதி, ஆரம்பத்தில் 2022 ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்குச் சேவை செய்யும், பின்னர் படிப்படியாக அனைத்து முன்னாள் இராணுவ வீரர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்தத் தொகுதியானது நிதிப் பதிவுகள், மருத்துவ பதிவுகள், நலன்புரி சேவைகள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளுக்கான அணுகலை வழங்குகிறது.
இந்நிகழ்ச்சியில், இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.ஜி.எல்.கே. வீரகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.