இராணுவத் தளபதியின் பங்கேட்புடன் 'தித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கான வவுச்சர் வழங்கும் நிகழ்ச்சி

‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற வவுச்சர் வழங்கும் நிகழ்ச்சியில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்துகொண்டார். இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.எம்.சி. ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திட்டம் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

ரூ. 26 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான உதவியைப் பெறுவதற்காக மொத்தம் 1,933 இராணுவ வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்திட்டம், இலங்கை இராணுவம், CIB மற்றும் லங்கா சதொச நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன், நலன்புரி பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பில் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில், இராணுவத் தளபதியுடன் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஆகியோர் இணைந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பயனாளிகளுக்கு தலா 15,000 ரூபாய் பெறுமதியான வவுசர்களை அடையாளப்பூர்வமாக வழங்கினர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.