55 வது காலாட் படைப்பிரிவினரால் கிளிநொச்சியில் நத்தார் பண்டிகை

27th December 2024

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிஜீஎஸ் பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையில் 55 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2024 டிசம்பர் 26 ம் திகதி கிளிநொச்சி நெலும் பியச திரையரங்கில் வருடாந்த நத்தார் கெரோல் நிகழ்வை நடாத்தினர்.

இந்நிகழ்வில் யாழ் ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி ஜஸ்டின் பெர்னாட் ஞானப்பிரகாசம் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக வடமாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் உள்ளூர் தேவாலயக் குழுக்கள் நிகழ்த்திய கரோல்கள், நடனங்கள் மற்றும் நேரடி இசை ஆகியவை இடம்பெற்றன.

அனுசரனையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளால் வழங்கப்பட்ட பரிசுகள், இனிப்புகள் மற்றும் பொம்மைகளால் சிறுவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மதகுருமார்கள், இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள், சிவில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.