223 வது காலாட் பிரிகேட் ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்கள் நன்கொடை
27th December 2024
223 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்ஆர் விஜேரத்ன யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பிரிகேட் படையினர் 2024 டிசம்பர் 21 திகதி மஹதிவுல்வெவ சிங்கபுர வித்யாவர்தன வித்தியாலயத்தில் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தனர். 6 வது இலங்கை கவச வாகன படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எல்பிஎஸ்யூகே லியனகெதர பீஎஸ்சீ அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்விற்கு வீஎஸ்ஐஎஸ் கணினி நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.பிரசன்ன விஜேரத்ன அனுசரணை வழங்கினார்.
இந்த முயற்சியின் மூலம் 134 மாணவர்கள் அத்தியாவசிய கல்வி வளங்களைப் பெற்றனர், இது அவர்களின் கல்வி அனுபவத்தை மேம்படுத்துவதையும் அவர்களின் எதிர்காலத்திற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.