15th June 2023 22:40:10 Hours
முல்லைத்தீவு நந்திக்கடல் களப்பை அண்டியுள்ள சதுப்புநிலங்களில் சதுப்பு நில தாவரங்களை நடும் திட்டம் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவின் படையினரால் ‘உலக சமூத்திர தினத்தை’ ஒட்டி சனிக்கிழமை (10) முன்னெடுக்கப்பட்டது.
இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், அரச அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இராணுவத்துடன் கைகோர்த்து மேற்குறிப்பிட்ட பகுதியில் நீரைத் தக்கவைக்கும் சதுப்புநில தாவரங்களை நாட்டினர்.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜெயவர்தன ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு அவர்களின் வழிகாட்டுதல் படி இத்திட்டமானது 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி, மற்றும் பல்வேறு படையலகுகளின் கட்டளை அதிகாரிகளால் நெருக்கமாக மேற்பார்வையிடப்பட்டது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் வசிக்கும் மீனவ சமூகத்தை சேர்ந்த 150 பொதுமக்கள் தாமாக முன்வந்து அப்பகுதியில் சதுப்பு நில தாவரங்களை நடாட்டினர்.